Photobucket

Thursday, 20 December 2012

500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடல் உருக்குலையாத நிலையில் கண்டுபிடிப்பு!


அர்ஜென்டீனா Llullaillaco என்ற மலைப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டெடுத்த ஆய்வாளர்களுக்கு குறித்த சிறுமியின் உடல் அதிர்ச்சி தரும் விடயமாக காணப்பட்டது. இவ்வுடல் மம்மி போன்று பதப்படுத்தப் படவில்லை..
ஆனாலும் தோல் இதயம் நுரையீரல் போன்ற தசைகள் உருக்குலையாது இன்னமும் காணப்படுகின்றன. மதரீதியாக உடலை பாதுகாக்க எதோவொரு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. இன்கா (inca) எனும் இனத்தவர்கள் கடவுளின் கட்டளைப்படி சிறுவயதில் இறப்பவர்களை மீளாத உறக்கத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் போது இறந்த உடலானது இருந்த நிலையில் உறக்கத்திற்கு தயார் செய்யப்படுகிறது.
இவர்களின் நடைமுறை எகிப்திய மம்மிகளின் உருவாக்கத்தில் இருந்து வேறுபட்டது. இப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் இங்கு வாழ்ந்து அழிவடைந்த இன்கா இன மக்களின் வரலாறு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
lanka sri news tamilwin
free tamil friends chat room
indian tamil friends news chat movies
manithan.com retham.com

No comments:

Post a Comment